நல்லா தெளிவா பேசுங்க... எப்பப் பார்த்தாலும் தூங்கி வழியற மாதிரியே பேசுனா எப்படி சார்!
போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறையினர் சோதனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை : போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறையினர் நடத்திய ரெய்டு குறித்து ஊருக்கே தெரிந்த நிலையில் தனக்கு தெரியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு சிறிய டெம்போவில் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள், லேப்டாப், பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு ஒரு சில அமைச்சர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திண்டுக்கல் சீனிவாசனோ சோதனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.
இத்போல் கடந்த வாரம் 187 இடங்களில் நடைபெற்ற சோதனை குறித்து செய்தியாளர்கள் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அப்படியாப்பா.. எனக்குத் தெரியாதே... நான் இப்போதுதான் தூங்கி எழுந்தேன் என்று கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது உளறி கொட்டி வருகிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதாவது ஜெயலலிதா அப்பல்லோ இருந்தபோது இட்லியும் சாப்பிடலை, சட்னியும் சாப்பிடலை என்று கூறி மன்னிப்பு கேட்டார். பாரத பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் மன்மோகன் சிங் என்றும் பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும், அவர் பரத நாட்டிய கலைஞர் என்றும் உளறி கொட்டினார்.
இதனால் தற்போது அவர் வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க செய்தியாளர்கள் எதை கேட்டாலும் தனக்கு தெரியாது என்று மிகவும் சேஃப்பாக விளையாடுகிறார் போலும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications