எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?.. அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மிரட்டல்
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து நேற்றைய தினம் அவருக்கு திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.
அப்போது ரஜினிகாந்த் பேசுகையில் கருணாநிதிக்கு மெரினா கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தால் நானே போராடியிருப்பேன் என்றார்.

வேண்டாம்
இதைத் தொடர்ந்து மெரினாவில் கருணாநிதிக்கு இறுதிச் சடங்கில் முதல்வர் மற்றும் அமைச்சரவை சகாக்கள் கலந்து கொள்ளாததை விமர்சனம் செய்தார். அப்போது நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா என்று கேட்டார். மேலும் ஜாம்பவான்கள் அப்போது மோதிக் கொண்டனர். இப்போது அதெல்லாம் வேண்டாம் ரைட் என்று கேட்டார் ரஜினி.

அமைச்சர் ஜெயக்குமார்
இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இவரது பேச்சை கேட்ட ரசிகர்கள் 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவை ரஜினி விமர்சனம் செய்ததை சமூகவலைதளங்களில் நினைவுகூர்ந்து கொண்டனர். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அரசியல் பேசுவது
அப்போது ஜெயக்குமார் கூறுகையில், கருணாநிதியால்தான் அதிமுக உருவானது என்று தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். முதலில் மறைந்த ஒரு தலைவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இதுபோல் அரசியல் பேசுவது ஆரோக்கியமான முறையல்ல.

முதிர்ச்சியின்மை
அதிலும் அரசியலே தெரியாமல் வரலாறே தெரியாமல் ரஜினி வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்று பேசியது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. கருணாநிதியிடம் இருந்து விலகி எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அதிமுகவே தவிர, கருணாநிதியால் உருவாக்கப்பட்டது அல்ல.

நடமாடியிருக்க முடியுமா
இதுபோல் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இருந்ததா. அப்போது ஓடி ஒளிந்து கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக மிரட்டினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications