For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை... நேற்று முளைத்த காளான் என ஜெயக்குமார் விமர்சனம்

காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை...ஜெயக்குமார் அதிரடி...வீடியோ

    சென்னை: காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்றில் முளைத்த காளான்கள் போல் எல்லா காலாவும் விரைவில் காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    ரஜினிகாந்த் நடித்து ஜூன் மாதம் வெளியாகவுள்ள காலா படத்தின் பாடல்கள் இன்று சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் வெளியாகின. அப்படத்தில் 9 பாடல்கள் வெளியாகின.

    இவற்றில் ஓரிரு பாடல்களில் தமிழக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக கூறப்படுகிறது.

    சட்டம் ஒழுங்கு

    சட்டம் ஒழுங்கு

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. இங்கு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர். அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

    ரஜினி படம்

    ரஜினி படம்

    காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். காலா போன்ற காளான்கள் விரைவில் காணாமல் போய்விடும். சமுதாயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்த கருத்தை ரஜினி தெரிவித்தார்?.

    மதுபாட்டிலுடன் நடிப்பு

    மதுபாட்டிலுடன் நடிப்பு

    சமுதாயத்துக்கான நல்ல கருத்தை தெரிவித்தவர் எம்ஜிஆர் மட்டுமே. எந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தார், எந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் சிகரெட்டை தூக்கிபோட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தார், எந்த படத்தில் மதுபாட்டிலுடன் நடித்தார்.

    தத்துவ பாடல்கள்

    தத்துவ பாடல்கள்

    நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான், பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான், திருடாதே பாப்பா திருடாதே உள்ளிட்ட நல்ல கருத்துகளை சமுதாயத்துக்கு எடுத்துரைக்கும் படங்களிலேயே நடித்தார். அவரது பாடல்கள் 50 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் கேட்கப்பட்டுதான் வருகின்றன.

    நியாயம் வந்து விடுமா

    நியாயம் வந்து விடுமா

    அரசியல் சுயலாபத்துக்காக குழப்பத்தை முயற்சிக்கக் கூடாது. தனது பாடல்கள் மூலம் அப்பாவி மக்களை தூண்டிவிடும் வகையில் இருந்தால் அதை அரசு ஏற்காது. எல்லாரும் தலைவனாக முடியாது, மீசை வச்சவன் எல்லாம் கட்டபொம்மன் அல்ல. ரஜினி அரசியலுக்கு வந்து விட்டால் மட்டும் நியாயம் வந்து விடுமா என்று கேள்வி எழுப்பினார்.

    English summary
    Minister Jayakumar warns Rajinikanth that if any song in Kaala stimulates violence then the government will take action against him.Today Kaala's audio release function takes place in YMCA ground.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X