ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அப்படி என்ன சிக்கல்?.. என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் நீர்வழிப்பாதைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக ரீதியில் பல்வேறு சிக்கல் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் மழை நீர் பாதித்த பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த 5 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை சமன் செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தலாமா என்று அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

Minister Sengottaiyan says that there is some difficulties in removing enccroahments

மழைநீர் வேடியாமல் இருப்பதற்கு ஆக்கிரமிப்புகள் காரணம் என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக ரீதியில் பல்வேறு சிக்கல் உள்ளது. மழை பாதிப்புகளை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வடிகால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சொன்னால் உயிர்போய்விடும், சொல்லாவிட்டால் தலைபோய்விடும் என்ற நிலையில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையனும் ஒப்புகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமே. அதையே தடுக்கும் வகையில் அப்படி என்னதான் சிக்கலோ!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN School education minister Sengottaiyan says that there is some difficulties in removing encroachments it is not possible to clear it immediately but will take measures to do it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற