என் தம்பி அழகிரியின் பேரணிக்கு வாழ்த்துக்கள்.. கருணாநிதி குடும்பத்திலிருந்து முதல் ஆதரவுக் குரல்!!
முக அழகிரியின் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு அவரது மூத்த சகோதரர் முக முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: முக அழகிரியின் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு அவரது மூத்த சகோதரர் முக முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணம் ஸ்டாலின்தான் என்ற அழகிரி அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனால் ஸ்டாலின் தரப்புக்கும் அழகிரி தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தான் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவோம் என எதிர்பார்த்த அழகிரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பலத்தை நிரூபித்த அழகிரி
திமுகவின் தலைவரான ஸ்டாலின், அழகிரி குறித்து சட்டைசெய்யாமல் அமைதி காத்து வருகிறார். இதனால் கொதிப்படைந்த அழகிரி தரப்பு தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்தது.

கண்டுகொள்ளாத ஸ்டாலின்
இதற்காக கருணாநிதி மறைந்து 30 நாள் நிறைவையொட்டி செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று சென்னையில் அமைதி பேரணி நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால் அதையும் கண்டுகொள்ளவில்லை ஸ்டாலின்.

இறங்கி வந்த அழகிரி
இதைத்தொடர்ந்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும் ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்க தயார் என அதிரடியாக இறங்கி வந்தார் அழகிரி. அதற்கும் வாய்திறக்காமல் இருந்தார் ஸ்டாலின்.

ஏராளமான தொண்டர்கள்
அறிவித்தபடியே நேற்று சென்னையில் அமைதி பேரணி நடத்தினார் அழகிரி. சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

ஆதரவு இல்லை
ஆனால் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து ஒருவரும் பங்கேற்கவோ ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. அவரது குடும்ப தொலைக்காட்சிகளும் அழகிரி பேரணி செய்தியில் ஆர்வம் காட்டவில்லை.

முதல் ஆதரவு குரல்
இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தில் இருந்து முதல் ஆதரவு குரல் அழகிரிக்கு கிடைத்துள்ளது. அதாவது அழகிரியின் மூத்த சகோதரரான முக முத்து அழகிரியின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
|
என் தம்பி அழகிரி
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் என் தம்பி அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்து, முக முத்து என கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications