For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களை அடாவடியாக கைது செய்த இலங்கை கடற்படை.. ஸ்டாலின் கண்டனம்

ராமேஸ்வரம், கோடியக்கரை ஆகிய கடல்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அடாவடியாக கைது செய்த இலங்கை கடற்படைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 85 தமிழக மீனவர்களை கைது செய்தது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்தது போன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படைக்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம், கோடியக்கரை ஆகிய கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த கடல்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவா்களை சிறைகளில் அடைத்துள்ளனர்.

MK Stalin condemns Srilankan Coastal Security for arresting Tamil Fishermen

இதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அடாவடியாக கைது செய்துள்ளது. இதை தட்டிக் கேட்காமல் தமிழக அரசு கடிதம் எழுதிக் கொண்டு வருவதால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கொடுமை செய்வதை எந்த அரசாலும் அனுமதிக்க முடியாது. மேலும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் 85 மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

அவர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசுக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும். மேலும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் உடனடியாக டெல்லி சென்று துறை அமைச்சர்கள் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் மு.க.ஸ்டாலின்.

English summary
MK Stalin demands to get back the Tamil Fishermen who was arrested by Srilankan Coastal security immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X