கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை வீட்டுக்கு போய் ஸ்டாலின் சந்திப்பு,, ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தியாகராயர் நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வீட்டிற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று திடீரென சென்றார். அங்கு அவரை சந்தித்து பேசினார்.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று முரசொலி பத்திரிகை தொடங்கிய நாளாகும். கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 1948ல் வார இதழாகவும், 1960ல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது.

MK Stalin meets Nallakannu

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழா ஆண்டு திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் முரசொலியின் பவள விழா பிரமாண்டமாக திமுகவினரால் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president MK Stalin met CPI Senior leader Nallakannu and invite him to Murasoli anniversary in his T.Nager residence.
Please Wait while comments are loading...