For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னை நீக்கியதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் காரணம் விஜயதாரணி அதிரடி குற்றச்சாட்டு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கியதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் காரணம் என்று விஜயதாரணி கூறியுள்ளார்.

விளவங்கோடு சட்மன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அப்பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகளிரணி தலைவராக ஜான்சிராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

MLA S Vijayadharani meet press

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி கூறுகையில், தேர்தல் நேரத்தில் அன்னை சோனியா காந்தி இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் மேலிடம் தவறு செய்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது கட்சியில் ஒரு திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.

தொடந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நீடித்தால் தமிழகத்தில் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா என்பது எனக்கு தெரியவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா போல் செயல்பட்டு வரும் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இளங்கோவன் கட்டாயத்தின் பெயரிலே எடுக்கப்பட்டுள்ளது. என்னை நீக்கியது நியாயமற்றது என்றும் தமிழக காங்கிரசில் தொடர்ந்து பெண்களுக்கு இடமில்லை விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த தனது முடிவை தெரிவிப்பதாகவும் விஜயதாரணி கூறியுள்ளார்.

English summary
MLA S Vijayadharani meets prees people after his dismmisedo of tamilnadu mahila congress president
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X