சசிகலாவால் கட்சியில் பதவி பெற்றவர்கள் விலகவேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவால் கட்சியில் பதவி பெற்றவர்கள் உடனடியாக விலக வேண்டும் என எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது என்றும், அவரது நியமனங்கள் செல்லாது என்றும் அதிமுக தலைமைக் கழகத்ல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

MLA Thanga Tamilselvan opposing the resolution of EPS team

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களே கட்சியை வழிநடத்துவார்கள் என்றும் ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் பொதுச்செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளருக்கு நிர்வாகிகளை நியமிக்க உரிமை உண்டு என்றார்.

மேலும் சசிகலாவால் கட்சியில் பதவி பெற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கட்சியில் இருந்து பதவி விலக வேண்டும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார்.

3500 பொதுக்குழு உறுப்பினர்களை ஆலோசிக்காமல் ஆதரவாளர்கள் வெறும் 75 பேரை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு ஏற்க முடியாத ஒன்று என்றும் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

English summary
TTV Dinakaran support MLA Thanga Tamilselvan opposing the resolution of EPS team. He is urging ministers Jayakumar, Senkottaiyan, CV Shanmugam should resign the post in party which is given by Sasikala.
Please Wait while comments are loading...