For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கவில்லை- பொறுத்திருந்து பாருங்கள்: கூவத்தூரில் சசிகலா

அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறையில் அடைத்து வைக்கவில்லை; அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றனர் என அக்கட்சி இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கவில்லை- எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர் என அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.

கல்பாக்கம் அருகே கூவத்தூரில் 90 அதிமுக எம்.எல்.ஏக்களை மன்னார்குடி குண்டர்கள் கட்டுப்பாட்டில் சசிகலா சிறை வைத்துள்ளார். கூவத்தூர் ரிசர்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் கடந்த 2 நாட்களாக கூவத்தூருக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் சசிகலா கெஞ்சி வருகிறார். இன்றும் கூவத்தூருக்கு சசிகலா சென்றார். அப்போது மன்னார்குடி குண்டர்கள், செய்தியாளர்களைத் தாக்கினர்.

இதனால் சசிகலாவின் காரை வழிமறித்து செய்தியாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பறிக்கப்பட்ட செல்போன்கள், கேமராக்கள் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார்.

அப்போது சசிகலா கூறியதாவது:

அதிமுக ஆட்சிக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் எம்.எல்.ஏக்கள் உறுதியாக உள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களின் சிறு குழந்தைகளை கடத்துவோம் என மிரட்டல் விடுக்கின்றனர்.

எம்.எல்.ஏக்கள் தொடர்பாக பொய் செய்திகள் பரப்புவது யார் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்போது வரட்டும். வருவதற்கு முன்னரே ஏன் பேசவேண்டும்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

English summary
ADMK Interim General Secretary Sasikala said that, you can see truth that non of our MLAs have been forcibly kept kuvathur. we are living here as a family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X