For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் செம மழை பாஸ்.. மக்கள் ஹேப்பியோ ஹேப்பி... 3 நாட்களுக்கு நீடிக்குமாம்!

சென்னையில் மீண்டும் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இன்றிலிருந்து 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் காய்ந்தது. எனினும் அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 டோட்டல் சேஞ்ச்

டோட்டல் சேஞ்ச்

இந்நிலையில் நேற்று முதல் வானிலையில் லேசான மாற்றம் தெரிந்தது. மேக மூட்டமான வானம், குளிர்ந்த காற்று என சென்னை கிளைமேட்டே டோட்டலாக மாறியது.

 எங்கெங்கு மழை

எங்கெங்கு மழை

இதையடுத்து இன்று காலை முதல் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர், ராயப்பேட்டை, கேளம்பாக்கம், ஈசிஆர், சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

 3 நாள்களுக்கு மழை

3 நாள்களுக்கு மழை

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

 தீவிரமடைந்தால்...

தீவிரமடைந்தால்...

கடந்த ஆண்டே மழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவியது. இதனால் விவசாயிகள் விளைச்சலின்றி பாதிக்கப்பட்டனர். தற்போது வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைந்தால் வரும் கோடைக் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்பது விவசாயிகள், பொதுமக்களின் கணக்கு.

English summary
Moderate rain hits in Chennai as the North East Monsoon intensifies. Chennai's Mylapore, Pattinappakkam, Mogappair, Anna Nagar are the places which has moderate rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X