ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதே கலாமுக்கு இழைக்கப்படும் இழிவு - டாக்டர் ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும், ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி என்று பிரதமர் மோடி கூறியதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதே கலாமுக்கு இழைக்கப்படும் இழிவு தான்! என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் அன்றாட செய்திகளுக்கு டுவிட்டரில் கிண்டலாக பதிவிடுவார். அரசியல், சினிமா, பொது செய்தி என எதையும் விடுவதில்லை.

மோடி பேச்சுக்கு சூட்டோடு சூட்டாக பதிவிட்டுள்ள டாக்டர் ராமதாஸ், ஓபிஎஸ் கிணறு விவகாரத்தையும் விடவில்லை.

இழிவுதான்

ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதே கலாமுக்கு இழைக்கப்படும் இழிவு தான்! என்று மோடிக்கு இடித்துக்கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

எதற்கு மோதல்

எடப்பாடியில் குளம் தூர்வாருவதில் அதிமுக, திமுக இடையே மோதல் என்ற செய்திக்கு கிண்டலடித்துள்ள ராமதாஸ், மோதல் தூர் வாருவதிலா... மணல் கொள்ளை அடிப்பதிலா? என்று கேட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான கருத்து

கமல் ஹாசனையும் விட்டு வைக்கவில்லை டாக்டர் ராமதாஸ். நான் ஊழலுக்கு எதிரானவன், கட்சிகளுக்கு எதிரானவன் அல்ல என்று கமலஹாசன் கூறுவதை வரவேற்கிறோம். 2ஜி, மணல் கொள்ளை குறித்து கருத்து என்ன? என்று கேட்டுள்ளார்.

ஊர் ஒன்றுபட்டால் கிணறு

சர்ச்சைக்குரிய கிணற்றை ஊர்மக்களிடம் ஒப்படைத்தார் ஓ.பி.எஸ் என்ற செய்திக்கு ஊர்மக்கள் ஒன்றுபட்டால் உண்டு ‘கிணறு'! என்று பதிவிட்டுள்ளார் ராமதாஸ். செய்திகளை விட டாக்டர் ராமதாஸின் ட்வீட்டுகள்தான் கூடுதல் சுவாரஸ்யம் படித்து சிரிங்க மக்களே.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DR Ramadoss has slammed Modi for comparing Kalam with Jayalalitha.
Please Wait while comments are loading...