டீக்கடைக்காரர் தான் பக்கோடா குறித்து பேசுவார்.. பிரதமர் மோடிக்கு சீமான் பதிலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டீக்கடைக்காரர் தான் பக்கோடா குறித்து பேசுவார்.. சீமான்- வீடியோ

  சென்னை: பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பேட்டி ஒன்றில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு குறித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதில் ''இந்தியாவில் ஒரு இளைஞன் பக்கோடா விற்று வீட்டிற்கு 200 ரூபாய் கொண்டு சென்றால் அவன் வேலை வாய்ப்பு உள்ளவன் என்றுதானே அர்த்தம்'' என்று குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் வேலைவாய்ப்பு குறித்த பேச்சுக்கு நாம் தமிழர் சீமான் பதில் அளித்து இருக்கிறார்.

  டீக்கடைக்காரர் தான் பக்கோடா விற்பனை குறித்து பேசமுடியும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதேபோல் மோடியின் பக்கோடா பேச்சுக்கு இந்தியா முழுக்க பலர் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  நாம் தமிழர் விழா

  நாம் தமிழர் விழா

  இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருமுருகப் பெருவிழா இன்று மாலை திருச்செந்தூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாலை 4.30 மணிக்கு திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது.இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

  பக்கோடா கடை

  பக்கோடா கடை

  அப்போது அவர் நிருபர்களிடம் மோடியின் பக்கோடா குறித்த பேச்சுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ''டீக்கடைக்காரர் தான் பக்கோடா விற்பனை குறித்து பேசமுடியும். டீக்கடைக்கடை வைத்து இருந்தவருக்குத்தான் பக்கோடா வியாபாரம் குறித்து தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  அரசியல்

  அரசியல்

  மேலும் இவர் கமலின் அரசியல் குறித்தும் பேசினார். அதில் ''37 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறிவருகிறார். அப்படி கூறும் அவர் இத்தனை நாட்களாக ஏன் அதை பற்றி பேசவில்லை'' என்று கேட்டுள்ளார்.

  அரசு சாதனை

  அரசு சாதனை

  மேலும் '' சென்னையில் 72 ரவுடிகள் கைது செய்யப்பட்டது தான் தமிழக அரசின் ஓராண்டு சாதனையாக பார்க்க முடிகிறது. தமிழக அரசு செய்த ஒரே சாதனை இது மட்டுமே'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Naam Thamilar Seeman says that Modi is a Chaiwala, that's why he speaks about Pakoda. He said this comment after Modi said ''If a person selling pakodas (snacks) earns Rs. 200 at the end of the day, it be will considered as employment'' in an interview.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற