
சென்னை: அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அடையாறு புற்றுநோய் மையத்தின் வைரவிழா சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆரோக்கியமே சிறந்த செல்வம் என கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முழுவதும் தமிழிலேயே உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். 14 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
வீடுகளுக்கு அருகில் நோய்த்தடுப்பு வசதிகளை வழங்குவதே அரசின் மருத்துவக் கொள்கை என்றும் மோடி தனது உரையில் தெரிவித்தார். நாட்டில் 60% இறப்பு பரவும் தன்மையற்ற நோயால் ஏற்படுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!