தண்டவாளங்களில் தண்ணீர்... புறநகர் மின்சார ரயில்களின் ஸ்பீட் குறைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழையால் ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் 2 தினங்களாக வெளுத்து வாங்கிய மழையால் பஸ்நிலையம், விமான நிலையம், ரயில்வே நிலையம் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

Moffussil electric train's speed reduced due to rain

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான தாம்பரம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்சார ரயில் சென்று வருகிறது.

இந்நிலையில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க மின்சார ரயில்களின் வேகம் குறைக்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rain hits Chennai for last few days. Rain water logged in railway tracks. So the speed of the electric trains were reduced.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற