For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனல் பறக்கும் அரசு ஊழியர்கள் போராட்டம்... ஜெயலலிதா செல்லும் ரோட்டை மறித்து முற்றுகை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் 7வது நாளாக தீவிரமடைந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்புக்கள் வெளிவராததால் முதல்வர் வருகின்ற பாதையில் போராட்டம் நடத்தினார்கள் அரசு ஊழியர்கள்.

கடந்த சில நாட்களாக தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் முழு வீச்சில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

More than 1 lakh workers arrested in TNசென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கிட்டத்தட்ட 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தேர்தல் பணிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த சில நாட்களாக தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் முழு வீச்சில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. சிவில் சப்ளை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை ஊழியர்களும் நேற்று முதல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 534 கூட்டுறவு வங்கிகள் மற்றும் 23 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 45 ஆயிரம் பேரும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 15 ஆயிரம் பேரும் என 60 ஆயிரம் பேர் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து போராடும் 68 சங்கங்கள் சார்பில் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பமானது. நேற்று அரசு ஊழியர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் அரசின் முக்கியத்துறையான வருவாய்த்துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் அப்பர் கூறியதாவது, ”புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அதிமுக ஓட்டு போட்டது. அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டும், புதிய பென்சன் திட்டத்தையும், பழைய பென்சன் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் 1.4.2003க்கு பிறகு அரசு துறைகளில் நியமனம் செய்யப்பட்ட அனைவருக்கும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை. எங்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் மேலும் தீவிரமடையும். பல்வேறு அரசுத்துறை ஊழியர் சங்கங்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளதால், இந்த போராட்டம் பல கட்டங்களை எட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் தங்களது 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த ஒருவார காலமாக நடத்திவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 7 ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர்.

இன்று சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் என்பதால் தங்களுக்கான சாதகமான அறிக்கையை முதல்வர் வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்களின் போராட்டம் உச்ச கட்டத்தினை அடைந்தது.

இதனால், அரசு அலுவலக வளாகமான எழிலகத்தின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும் எழிலகத்தின் பின்புறம் கூவம் நதியோரம் உள்ள ஒரு வாயிலை முட்டித்தள்ளி சாலைக்கு வந்தனர் அரசு ஊழியர்கள். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மூன்று இடங்களில் போலீஸார் தடுப்புகளை போட்டு தடுத்தும் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு அங்கிருந்து நேராக மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போலீஸாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், முதல்வர் செல்லும் கடற்கரை சாலையில் அரசு ஊழியர்களின் இந்த திடீர் சாலை மறியலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
More than 1 lakh government employees arrested for their riot and protest in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X