காலையிலிருந்து வெயிலும், மழையும்.. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது போல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல இடங்களில் வெயிலும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. இதனால் சென்னையில் மீண்டும் இயல்புநிலை திரும்பி வருகிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 40 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிடவும் 93 சதவீதம் அதிகம் ஆகும்.

 நேற்றிரவு முதல் நோ மழை

நேற்றிரவு முதல் நோ மழை

இதனிடையே சென்னையில் நேற்று இரவு முதல் மழை ஓய்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது வெயில் காய்ந்து வருகிறது.

 இயல்புநிலை திரும்புகிறது

இயல்புநிலை திரும்புகிறது

இதனால் தாழ்வானப் பகுதிகளில் தேங்கியுள்ள நீர் வடிந்து வருகிறது. மழை ஓய்ந்து வெள்ள நீர் வடிவதால் சென்னையில் இயல்பு நிலை திரும்புகிறது.

 அவ்வப்போது வெயில்

அவ்வப்போது வெயில்

வளசரவாக்கம், ராமாபுரம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், முகப்பேர் உள்ளட்ட இடங்களில் மேகமூட்டத்துடன் அவ்வப்போது வெயிலும் தலைக்காட்டி வருகிறது. சில இடங்களில் திடீரென லேசான தூறலும் இருந்து வருகிறது.

 மாடிகளில் காயும் துணிகள்

மாடிகளில் காயும் துணிகள்

விட்டு விட்டு காயும் வெயிலால் தாய்மார்கள் துணிகளை துவைத்து காயப்போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பெரும்பாலான வீட்டின் மாடிகளில் துணிகள் காயப்போடப்பட்டிருப்பதை காண முடிகிறது.

 முந்தைய நாட்களில்..

முந்தைய நாட்களில்..

சில இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று முன்தினம் அதற்கு முந்தைய நாட்களில் எல்லாம் பகலில் சுள்ளென வெயில் காய்ந்தது.

 மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

ஆனால் அதற்கு நேர்மாறாக மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இன்றும் அதேபோன்ற சூழல் நீடிப்பதால் மாலை நேரத்தில் என்ன நடக்குமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Most of the places in Chennai gets hot sun. Throught Chennai gets drizzling sometime and looks cloudy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற