For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலமுனைப் போட்டி... ஏகப்பட்ட முதல்வர் வேட்பாளர்கள்.. தமிழகத்துக்கு இது புதுசு இல்லை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் "முதல் முறையாக" மாற்று அரசியல், 4 அல்லது 5 முனைப் போட்டி... பல முதல்வர் வேட்பாளர்கள் உருவாகியிருப்பதாக கூறப்பட்டாலும் இதற்கு முன்னரும் 1989, 1996-ம் ஆண்டுகளிலும தமிழகம் இப்படியான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கிறது.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள் அல்லாமல் தேமுதிகவுடன் இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி இணைந்து ஒரு அணியாக களமிறங்கியுள்ளது.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாமக ஆகியவையும் தனித்தனியே களமிறங்குகின்றன. இன்றைய நிலையில் சட்டசபை தேர்தலில் 5 முனைப் போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. இப்படி பலமுனைப் போட்டி தமிழகத்தில் இதற்கு முந்தைய தேர்தல்களிலும் இருந்தது உண்டு.

4 முதல்வர் வேட்பாளர்கள்

4 முதல்வர் வேட்பாளர்கள்

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆர். முதல்வரானார். ஆனால் அவர் ஒரு மாதம்தான் அப்பதவியில் நீடித்தார். அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுபட்டது. இதனால் சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஓராண்டு காலத்துக்குப் பின் 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மூப்பனார் என 4 முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

4 முனைப் போட்டி

4 முனைப் போட்டி

அதிமுக( ஜெ) அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றிருந்தது. அதிமுக (ஜா) அணி, காங்கிரஸில் இருந்து வெளியேறி சிவாஜி கணேசன் உருவாக்கிய தமிழக முன்னேற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சி, தா. பாண்டியன் தலைமையிலான யூ சிபிஐ- கட்சியுடனும் திமுகவோ மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதா கட்சி ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருந்தன

வென்றது திமுக

வென்றது திமுக

இந்த தேர்தலில் 202 இடங்களில் போட்டியிட்ட திமுக 169 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. திமுகவுடன் கூட்டணி வைத்த மார்க்சிஸ்ட் கட்சி 15, ஜனதா கட்சி 4 இடங்களிலும் வென்றன. அதிமுக ஜெயலலிதா அணி 27 இடங்களையும் காங்கிரஸ் 26 இடங்களையும் அதிமுக ஜானகி அணி 2 இடங்களையும் கைப்பற்றின. பின்னர் அதிமுகவின் 2 கட்சிகளும் ஜெயலலிதா தலைமையில் ஒன்றாகின.

1996-ம் ஆண்டும்....

1996-ம் ஆண்டும்....

இதேபோல் 1996-ம் ஆண்டும் தமிழகம் பலமுனைப் போட்டியை எதிர்கொண்டது. அதிமுக- காங்கிரஸ் கூட்டணி; திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி; திமுகவில் இருந்து வெளியேறி வைகோ உருவாக்கிய மதிமுக- மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி; பாமக- திவாரி காங்கிரஸ் கூட்டணி என 4 முனைப் போட்டி நிலவியது.

அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் இடம்பெற்றது. திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய தேசிய லீக் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

மதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட், ஜனதா தள் ஆகியவையும் பாமகவும் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸும் இடம்பெற்றிருந்தன.

வென்றது திமுக

வென்றது திமுக

இந்த தேர்தலிலும் 182 இடங்களில் போட்டியிட்ட திமுக 173 இடங்களைக் கைப்பற்றியது. 168 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 4 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 39, பாமக 4 இடங்களிலும் வென்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8; மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்திலும் வென்றன. திமுக- அதிமுகவுக்கு மாற்றாக களமிறங்கிய மதிமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக தமிழகம் ஏற்கனவே மாற்று அரசியல், பலமுனைப் போட்டி, முதல்வர் வேட்பாளர்கள் என்பதையெல்லாம் தேர்தல் களத்தில் சந்தித்தே இருந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

English summary
Tamilnadu already face multi-cornered poll battle in Assembly elections 1989 and 1996.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X