சேலம் சுற்றுவட்டாரத்தில் மர்ம காய்ச்சல்.. ஒரே நாளில் 3 சிறுமிகள் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம் : சேலம் சுற்றுவட்டாரத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் ஒரே நாளில் 3 சிறுமிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பல்வேறு உயிரிழப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகமே பீதியில் உறைந்துள்ளது. இந்நிலையில் மர்மக் காய்ச்சல் வேறு பரவி வருகிறது.

Mysterious fever: 3 were died in Salem

இதனால் சுகாதார துறை நடவடிக்கை எடுக்கும்போதிலும் மர்மக் காய்ச்சலுக்கு பலியாகும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த சிறுமி கீர்த்தி(8), நாகியம்பட்டியைச் சேர்ந்த சிறுமி இலக்கியா (6), ஓமலூரைச் சேர்ந்த சிறுமி அபிநயாவும் (9) சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் இறந்துவிட்டனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mysterious fever spreads in Salem District results 3 girl children died.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற