For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள்... - நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 'ஆட்சி செயற்பாட்டு வரைவு' எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சீமான், "தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத் தலைநகராக இருக்கும்; தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்; மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும் தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் இருக்கும்," என்றார்.

Naam Tamilar's election manifesto

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், கிராமங்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள்; இதனால் நகரம் பிதுங்கிவழிகிறது; உயிரைச் சுமந்துசெல்லும் அவசர ஊர்திகூட சரியான நேரத்துக்குச் செல்ல முடியவில்லை; இதனால் நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவை பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு அமைந்தால் தலைநகரை மாற்றி அமைக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

314 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், 49 உத்தேசத் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில...

பசுமைப் பத்தாண்டு

பத்தாண்டுப் பசுமைத் திட்டம் என சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை பற்றியும் சணல்நார்ச் செடி என தனியாகவும் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பற்றிய கவிதை ஒன்றும் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பொறியாளர்

தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தூய்மைப் பொறியாளர் எனக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை, ‘ஒரு குறிப்பிட்ட இனக் குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப் பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும் என்கிறது.

வனக் காவலர் வீரப்பன்

சந்தனக் கடத்தல் வீரப்பனை ‘தமிழர்களின் வனக் காவலர்' எனக் குறிப்பிட்டுள்ளதுடன், 'ஐயா வீரப்பனாருக்கு நினைவகம் கட்டப்படும்'.

‘இன விடுதலைக்குத் தன்னுயிரை ஈகம்செய்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூஃப், வீரத் தமிழன் முத்துக்குமார், மூன்று அண்ணன்மார்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து காக்க தன்னுயிரை ஈகம்செய்த வீரத்தங்கை செங்கொடிக்கு தனித்தனியே நினைவகம் அமைக்கப்படும்.

English summary
Seeman, the Chief Coordinator of Naam Tamilar has released his party's election manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X