ராமநாதபுரத்தில் திமுக வெற்றி முகம்- 3வது இடத்தில் பாஜக
சென்னை: நக்கீரன் வெளியிட்டுள்ள லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகளில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் ஜலீல் வெல்வார் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் ஒரு லோக்சபா தொகுதிக்கு 600 பேரிடம் நக்கீரன் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் மட்டும் இன்னமும் செல்வாக்கு இருக்கிறதாம்.
3வது இடத்தில் பாஜக
ராமநாதபுரம் தொகுதியில் 600 பேரில் திமுகவுக்கு 186, அதிமுக 167 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3வதாக பாஜகவுக்கு 99, காங்கிரஸுக்கு 75 பேர், சிபிஐக்கு 25 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம், பரமக்குடி. திருவாடானையில் திமுக
ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை சட்டசபை தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு தலா 100 பேரில் முறையே 33, 33, 36 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தொகுதிகளில் அதிமுகவுக்கு முறையே 30, 28, 29 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதுகுளத்தூர், திருச்சுழியில் அதிமுக
முதுகுளத்தூர் மற்றும் திருச்சுழி தொகுதிகளில் அதிமுகவுக்கு தலா 100 பேரில் 32 மற்றும் 37 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கியில் திருநாவுக்கரசர்
அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் இன்னமும் காங்கிரஸ் வேட்பாளராக இருக்கும் திருநாவுக்கரசர் கை ஓங்கியே இருக்கிறது. இத்தொகுதியில் 100 பேரில் திருநாவுக்கரசருக்கு 30 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜக நிலவரம்
ராமநாதபுரத்தில் 18, முதுகுளத்தூரில் 17, பரமக்குடியில் 18, திருவாடானையில் 16, திருச்சுழியில் 15, அறந்தாங்கியில் 15 என சீரான ஆதரவைப் பெற்றுள்ளது பாஜக.
திமுகவுக்கு 186
மொத்தம் 600 பேரில் திமுக வேட்பாளர் ஜலீலுக்கு 186, அதிமுக வேட்பாளர் அன்வர் ரஜாவுக்கு 167, பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு 99, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு 75, சிபிஐ வேட்பாளர் உமா மகேஸ்வரிக்கு 25 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications