தினகரனுக்கு எதிரான தீர்மானம்....காற்றோடு கத்திச்சண்டை போடும் கபோதிகளின் அறிவிப்பு... நாஞ்சில் சம்பத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புகள் தினகரனை கட்டுப்படுத்தாது என்று தினகரன் ஆதரவாளரும், அதிமுக பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தினகரன் நியமனம் கட்சி விதிப்படி செல்லாது என்றும், டிடிவி தினகரன் வெளியிடும் அறிவிப்புகள் அதிமுகவினரை கட்டுப்படுத்தாது என்றும் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், காற்றோடு கத்திச்சண்டை போடும் கபோதிகளின் அறிவிப்பு தினகரனை கட்டுப்படுத்தாது.

 Nanjil sampath hardly criticise Edappadi Palanisamy

அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்திருந்து பாருங்கள், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட அஜென்டாவை செய்து முடித்திருக்கிறார்கள். முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் இந்த முடிவை அறிவித்துள்ளனர், ஒன்றிய, நகர செயலாளர்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தினகரனை கட்டுப்படுத்தாது. முதல்வர் பழனிச்சாமிக்கு பதவி போதை கண்ணை மறைக்கிறது.

இவர்களின் அறிவிப்பால் துரோகம் தன்னுடைய சுயரூபத்தை காட்டியிருக்கிறது. வரலாற்றின் பக்கத்தில் துரோகிகளுக்கு என்ன பரிசு கிடைத்ததோ அதே பரிசு முதல்வர் பழனிச்சாமிக்கும் கிடைக்கும். டிடிவி தினகரனை மையப்படுத்தியே அரசியலுக்கு வந்து பிரபலமானவர் தற்போது அவரை தனிமைப்படுத்துகிறார்.

டிடிவி தினகரனை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இன துரோகிகளின் எண்ணம் அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள். 14ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் இதற்கான பதில் இருக்கும். இறுதி எஜமானர்கள் தொண்டர்கள் தான், தொண்டர்கள் தான் யார் தலைமை என்பதை முடிவு செய்ய முடியும், இவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடையாது. எஜமானர்கள் இட்ட உத்தரவை நிறைவேற்றிவிட்டதாக கட்டளைக்கு கட்டுபட்டு அதனை செய்து முடித்துவிட்டோம் என்பதை இன்று முதல்வர் பழனிச்சாமி வெளிக்காட்டியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nanjil sampath says Edappadi Palanisamy as 'Drogi' and the reply for this will be at Dinakaran's first Public meeting at Madurai.
Please Wait while comments are loading...