தமிழ்ப் புத்தாண்டு: தமிழர்களின் விருப்பங்கள் ஈடேற வாழ்த்துகிறார் மோடி
தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழர்களின் விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video

சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழர்களின் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று சித்திரை மாதம் 1-ஆம் தேதி அந்த மாநிலங்களில் புத்தாண்டாக கொண்டாடுகின்றன. இதையடுத்து நரேந்திர மோடி தமிழ், மலையாளம், ஒடியா, பெங்காலி, அஸ்ஸாம் உள்ளிட்ட மொழிகளில் தனது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் சித்தரை மாத பிறப்புக்கு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 14, 2018
காவிரி வாரியம் கோரி தமிழகமே போராட்ட களமாக உள்ள நிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி அதுகுறித்து வாய்த் திறக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
