ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தமிழகத்திற்குள் வந்திருக்காது.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்திருக்காது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்திருக்காது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் நிகழ்ச்சி

நேர்காணல் நிகழ்ச்சி

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னீப்பரிட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாளை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும் அந்நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒளிப்பரப்பட்டு வருகிறது.

சும்மா சொல்லக் கூடாது

சும்மா சொல்லக் கூடாது

இதில் திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான துரைமுருகன் பங்கேற்றுள்ளார். அப்போது எல்லாவற்றிலும் ஜெயலலிதாவை குறை சொல்ல முடியாது என அவர் கூறினார்.

இருந்திருந்தால்

இருந்திருந்தால்

ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்திருக்காது என்றும் அவர் கூறினார். அதற்கான ஆளுமை ஜெயலலிதாவிடம் இருந்ததாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

ஜெயலலிதா யானை

ஜெயலலிதா யானை

ஜெயலலிதாவுடன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸை ஒப்பிட முடியாது என்ற அவர் ஜெயலலிதா யானை என்றும் இவர்கள் எறும்பு என்றும் தெரிவித்தார். திமுகவின் அரசியல் எதிரியா ஜெயலலிதாவை அவரது மறைவுக்குப் பிறகு துரைமுருகன் புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former DMK minister Duraimurugan has said that NEET exam did not enter in Tamilnadu if Jayalalitha is alive. He also said in a TV Show that Jayalalitha is a Elephant and OPS, EPS are ants.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற