For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் கந்துவட்டி குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிமுகம்.. இதானா சார் உங்க டக்கு?

கந்துவட்டி கொடுமைகள் குறித்து புகார் அளிக்க நெல்லை ஆட்சியர் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரிதாபம்! கந்து வட்டியின் கோரப்பசிக்கு கருகிய உயிர்கள்-வீடியோ

    நெல்லை: கந்துவட்டி கொடுமைகள் குறித்து புகார் அளிக்க நெல்லை ஆட்சியர் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கி முத்து என்பவர் நேற்று மனைவி மற்றும் தனது 2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த இசக்கிமுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கந்துவட்டி கொடுமை குறித்து கலெக்டர், காவல்துறை என புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த இசக்கிமுத்து இந்த துயர முடிவை எடுத்தார்.

    ஹெல்ப்லைன் அறிமுகம்

    ஹெல்ப்லைன் அறிமுகம்

    காவல்துறை மற்றும் கலெக்டரின் அலட்சியமே 3 உயிர்கள் பறிபோக காரணயம் கண்டனக் குரல்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் கந்துவட்டி தொடர்பாக புகார் அளிக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளார்.

    ஆட்சியர் அறிவிப்பு

    ஆட்சியர் அறிவிப்பு

    நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, நாள் வட்டி உள்ளிட்ட அதிக வட்டி வசூல் செய்து பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களின் மீது பாதிக்கப்பட்டவர்கள் 96297 11194 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விரைந்து தீர்வு காணப்படும்

    விரைந்து தீர்வு காணப்படும்

    பதிவு செய்யப்பட்ட புகாரின் மீது உடனடியாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கூட்டாக விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் விரைந்து தீர்வு காணப்படும் என்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

    கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கப்பட்ட எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்றும், தற்கொலை உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் புகாரின் மீது தனிகவனம் செலுத்தப்பட்டு கந்து வட்டி சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதான சார் உங்க டக்கு..

    இதான சார் உங்க டக்கு..

    கந்து வட்டி தொடர்பான இசக்கி முத்துவின் புகாரை கிடப்பில் போட்டு நரிக்குறவர் இனமக்களுடன் உற்சாகமாக தீபாவளி கொண்டாடினார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி. இந்த நடவடிக்கையை அவர் முன்கூட்டியே எடுத்திருந்தால் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பரிதாபமாக போயிருக்காது. ஒரு குடும்பமும் தீக்கிரையாகியிருக்காது.

    English summary
    Nellai collector introducing a helpline mobile number for complaint against calm interest. The Number is 96297 11194, the district collector announced this number after a family commit suicide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X