கந்துவட்டி கொடுமை குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி | நெல்லை கலெக்டர் என்ன சொல்கிறார்?- வீடியோ

  சென்னை: கந்துவட்டி கொடுமை குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

  அண்மையில் கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் 4 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

  Nellai district court gives bail to cartoonist Bala

  இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கந்துவட்டி கொடுமை குறித்து பலமுறை இசக்கி முத்து புகார் அளித்தும் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

  இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நெல்லை ஆட்சியரின் புகாரின் பேரில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்

  இந்நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய கார்ட்டூனிஸ்ட் பாலா
  கேலிச்சித்திரம் வரைந்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.

  மேலும் தீயில் எரிந்து குழந்தை இறந்ததன் கோப வெளிப்பாடே கந்துவட்டி கொடுமை குறித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்கு காரணம் என கார்ட்டூனிஸ்ட் பாலா விளக்கமளித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Nellai district court gives bail to cartoonist Bala. Cartoonist Bala arrested yesterday by complaint of Nellai district collector.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற