நெல்லை மருத்துவமனையில் இன்று “எலும்புக் கூடு திருமணம்”!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் பொன் விழா மருத்துவ கண்காட்சி தொடங்கியது. இதில் மொத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொன் விழாவை முன்னிட்டு 10 நாள் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி 40 அரங்குகளுடன் தொடங்கியது. கண்காட்சியில் ஓவ்வொரு துறையும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு மருத்துவ கூறுகளை காட்சிப்படுத்தியுள்ளன.

சமூக நோய் தடுப்பு துறை சார்பில் சாலை பாதுகாப்பு, வாழ்வியல் சுழற்சி, முறையாந குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகள், இரும்பு சத்து நிறைநத உணவுகள் உளளிடடவை காட்சிப்படுத்தப்பட்டுளளன. மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்த தானம் செய்வது எப்படி, ரத்த தானம் செய்த முக்கிய நபர்களின் புகைப்படங்கள், ரத்த தான விழிப்புணர்வு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிறுநீரகவியல் துறை சார்பில் இரைப்பை நோய்கள், அவற்றை குணப்படுத்தும் முறைகள், மாற்று சிறுநீரகம் பொருத்துதல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
உடற்கூறு துறை சார்பில் உடல்தானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், உடலை பதப்படுத்துதல், எலும்பு கூடுகள் பற்றிய செயல் விளக்கம் வைக்கப்பட்டிருந்தது. நுண்கதிர் பிரிவு துறை சார்பில் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், மார்பக பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ளும் முறைகள் குறி்த்து வீடியோவில் படம் எடுத்து விளக்கினர்.
எஸ்க்ரே, ஆல்ட்ரா சவுண்ட் எஸ்க்ரே எடுப்பது குறித்தும் விளக்கினர். நுண்கதிர் வீச்சு துறை சார்பில் புற்று நோயை கட்டுப்படுத்த கதிரியக்க சிகிச்சை அளிக்கும் முறை குறித்து வீடியோவில் நேரிடியாக விளக்கப்பட்டது. கதிரியக்க சிகிச்சையின் போது உடலில் மின்சாரத்தை பாய்ச்சுவதால் பலர் பயப்படுகின்றனர்.
இதனால் இதனை போக்க இந்த கண்காட்சியில் இதனை நேரிடையாக காட்சிப்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர். இந்த கண்காட்சி வரும் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியில் பங்குபெறும் பொதுமக்களுக்கு உணவு அரங்குகளும் தனியாக இடம் பெற்றுள்ளன. இன்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்த எலும்பு கூடு திருமணம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications