ரூ.18 ஆயிரம் லஞ்சம்... நெல்லையில் வட்டாட்சியர் பாலமுருகன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார்.

நெல்லையில் ஒப்பந்ததாரராக உள்ளவர் பரமசிவன். இவர் நிதித் தகுதிச் சான்றிதழை பெறுவதற்காக வட்டாட்சியர் பாலமுருகனை அணுகினார்.

Nellai Tashildar arrested for demanding bribe

அப்போது இந்த சான்றிதழ் வழங்குவதற்கு தமக்கு ரூ.18 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று பரமசிவனிடம் பாலமுருகன் கேட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பரமசிவன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.18 ஆயிரம் நோட்டுக்களை பரமசிவனிடம் கொடுத்து பாலமுருகனிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கேட்டுக் கொண்டனர்.

பணத்தை தயாராக வைத்துள்ளதாக பாலமுருகனுக்கு பரமசிவன் போன் செய்தார். பின்னர் அந்த பணத்தை பாலமுருகன் லஞ்சமாக பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் பாலமுருகனை கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tashildar from Nellai was arrested in the bribery case. The Vigilance alleged that he has got Rs. 18,000 as bribe from a contractor for issuing a certificate.
Please Wait while comments are loading...