For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ருக்குமணி ‘ருக்கு‘என செல்லமாய் அழைப்போம்.. மிஸ் யூ ருக்கு.. நெட்டிசன்கள் வேதனை

திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு உயிரிழந்தது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உயிரிழப்பு- வீடியோ

    திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உயிரிழந்தது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு கண்ணில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து மாரடைப்பால் உயிரிழந்தது. ருக்கு யானை ஜெயலலிதாவால் திருவண்ணாமலை கோவிலுக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதாகும்.

    உயிரிழந்த ருக்குவின் உடல் கோவில் சுற்றுச்சுவர் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. ருக்குவின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்று விட்டாள்

    மதங்கொண்ட பலர் மனித உருவில் உலாவ , மனிதன் போல அன்றாடம் பழகி வந்த நமது "ருக்கு" வின் இழப்பு பேரிழப்பு...!
    மாடவீதிகளில் பெரிய நாயகருடன் அலங்கரித்தவள் , இன்று அந்த நாயகர் இருக்கும் இடமே தேடி சென்று விட்டாள்...
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு மரணம். என பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர்

    மிஸ் யூ ருக்கு

    எங்கள் ஊர் திருவண்ணாமலை கோயில் யானை ருக்கு இன்று இறைவனடி சேர்ந்தது.....மிஸ் யூ ருக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்

    ஆன்மிக வாழ்க்கை

    23 ஆண்டுகள் ஆன்மிக வாழ்க்கை - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு மரணம்.. என்கிறார் இந்த நெட்டிசன்

    அடைக்கலமானார்

    திருவண்ணாமலை #கோவில் #யானை #ருக்கு இன்று அதிகாலை #இயற்கை #எய்தி அண்ணாமலையார் பாதம் அடைக்கலமானார் என்பதை #ஆழ்ந்த வருத்தமுடன் தெரிவித்து கொள்கிறேன்.. என்கிறார் இந்த வலைஞர்

    செல்லமாய் அழைப்போம்

    ருக்குமணி "ருக்கு" என செல்லமாய் அழைப்போம்..
    மாசி மகம் யாத்திரையில் அவர் தான் முன்னாடி
    எம்பெருமானே பின்னாடி.. அவங்களை பார்க்கையிலே
    பரவசம் தொற்றிக்கொள்ளும்.. தி.மலையின் ஆகச்சிறந்த அம்மா..
    ஒற்றை நாணயத்தை பெற்றுக்கொண்டு தொபுக்கடீர்னு
    தலையில் ஆசிர்வதித்தவள் விண்ணுலகம் சேர்ந்தாள்.. என்கிறார் இந்த வலைஞர்

    தொட்டு வாழ்த்தியிருக்கும்

    திருவண்ணாலை அண்ணாமலையார் திருக்கோவில் யானை " ருக்கு " மரணம்...ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
    எத்தனை மனிதர்களை தொட்டு வாழ்த்தியிருக்கும். என்கிறார் இந்த நெட்டிசன்

    பேரழகி தேவசேனா அவள்!

    எங்கள் நகரின் செல்ல மகள், எங்கள் அனைவரின் பாசத்துக்குரிய அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு நேற்றிரவு மரணமடைந்தாள். ஒவ்வொரு புத்துணர்ச்சி முகாமிலும் வாலிப யானைகளைக் கிரங்கடித்து தன் பின்னாலேயே சுற்ற வைக்கும் பேரழகி தேவசேனா அவள்! மனம் பதைக்கிறது. என்கிறார் இந்த வலைஞர்

    English summary
    Netizens sharing their condoles for Thiruvannamalai temple elephant Rukku demise.Thiruvannamalai temple elephant Rukku Passes away last night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X