வயது ஆக, ஆக நீ மேலும் அழகாகிறாய் !!! ஹேப்பி பர்த்டே சென்னை!
Recommended Video

சென்னை நகரின் 379வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை: சென்னை நகரின் 379வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை 379-வது வயது என்று கூறி பிறந்த நாள் கொண்டாடி வந்தாலும் உண்மையில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் என கூறப்படுகிறது. 1,639-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தான் சென்னப்பட்டினத்தை வாங்கியதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதற்கான ஆவணங்கள் 1,746-ம் ஆண்டு வரை செயின் ஜார்ஜ் கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சென்னப்பநாயக்கருக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை குறிக்கும் வகையிலான தங்க செப்பேடு ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானதாகவும் கருத்து நிலவுகிறது. அந்த நாள் தான் தற்போது சென்னை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
|
பெயர்வதிற் செம்மை
பெயரது சென்னை
பெயர்வதிற் செம்மை
புயலது கண்டும்
பயில்வது கேண்மை
சதுப்பினை யுண்டு
செரிப்பவ ருண்டு
சிதைப்பவ ரென்று
சினப்பவ ருண்டு
சிதையா துவாழ்க
சிறந்து!
|
சென்னை பிடிக்கிறது
இனிய சென்னை பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் இனிக்கிறது அதனால் சென்னை எனக்கு பிடிக்கிறது.
|
சென்னை தினம்
வந்தாரை
வாழ (வைத்த,வைக்கின்ற,வைக்கும்)
சென்னை க்கு இன்று 379 பிறந்த நாள்
Happy Birthday Chennai
#சென்னை_தினம்
#பழைய_மயிலாப்பூர் புகைப்படம்!
|
வாழ்வளிக்கும் சென்னை
379 வது பிறந்த நாள் காணும் சென்னை!!!
வாழ்வளிக்கும் சென்னைக்கு வணக்கம்.
|
மேலும் அழகாகிறாய்
சுனாமி,புயல், மழை என எத்தனை இயற்கை இடர்பாடுகள் வந்தாலும் அத்தனையும் முறியடித்து மேலும்,மேலும் வளர்கிறாய்..
வயது ஆக,ஆக நீ மேலும்
அழகாகிறாய் !!!
379 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை
|
இந்நாளில் போற்றுவோம்
தலையை கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் என முழங்கி சென்னைக்கு மூவேந்தர் கொடியை தந்த ம.பொ.சி ஐயாவை இந்நாளில் போற்றுவோம்.
#சென்னைநாள் - உணர்கிறார் பெருமையாக
|
யுனெஸ்கோ
சென்னை! இது தமிழ்நாட்டின் தலைநகர் மட்டுமல்ல, உலக தமிழர்களின் பண்பாட்டு மையம்.இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். யுனெஸ்கோவின் பாரம்பரிய இசையை பாதுகாக்கும் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற நகரம். இன்று 379 வது சென்னை நாள்
|
சென்னை அவதரித்த நாள்
சென்னையில் வாழ்ந்து விட்டால் உலகின் எந்த மூலையிலும் தாக்கு பிடித்து வாழ்ந்து விடலாம், எதிர்நீச்சல் போட்டு வாழ கற்று தரும் சென்னை அவதரித்த நாள்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications