திருநாவுக்கரசர் அரசியலுக்கு வந்து 50 ஆண்டாகிவிட்டதா? காங்கிரஸில் வெடிக்கும் அக்கப்போர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளாகிவிட்டதா? இல்லையா? என்கிற அக்கப்போர் சத்தியமூர்த்தி பவனில் உக்கிரமாக நடைபெற்று வருகிறது.

திருநாவுக்கரசரின் பிறந்த நாள் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளுடன் திருநாவுக்கரசர் 'பொதுவாழ்வில் பொன்விழா' நாள் என குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

40 ஆண்டுதானே...

40 ஆண்டுதானே...

இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. திருநாவுக்கரசர் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானது 1977-ம் ஆண்டுதான்.. அப்படிப் பார்த்தால் 40 ஆண்டுகள்தான் ஆகிறது.

பப்ள்சிடிட்டியா?

பப்ள்சிடிட்டியா?

பொன்விழா கொண்டாட்டத்துக்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. இப்போதே என்ன அவசரத்துக்கு இந்த மாதிரி பப்ளிசிட்டியெல்லாம் என எகிறது எதிர்தரப்பு.

50 ஆண்டுகளாகிவிட்டது

50 ஆண்டுகளாகிவிட்டது

ஆனால் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களோ, அண்ணன் எம்.எல்.ஏ.வானது 1977ல்தான்...அதுக்கு முன்னாடியே அரசியலுக்கு வந்துவிட்டார்.. அதனால்தான் பொன்விழா கொண்டாடுகிறோம் என சீற்றத்துடன் பதில் தருகிறது.

சத்தியமூர்த்தி பவன் சர்ச்சை

சத்தியமூர்த்தி பவன் சர்ச்சை

காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இது தொடர்பான காரசார மோதல்கள் வெடித்துள்ளன. விரைவில் பகிரங்கமாக திருநாவுக்கரசைக் கண்டித்து காங்கிரஸில் இருந்தும் அறிக்கைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றன கதர் வட்டாரங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A new controversy over Thirunavakkarasar's public life years in Tamilnadu Congress.
Please Wait while comments are loading...