அதிமுக உடைந்து எம்.ஜி.ஆர். அதிமுக என்ற புதிய கட்சி உருவாகும்: பிரேமலதா பேச்சு
சென்னை: அதிமுக உடைந்து எம்.ஜி.ஆர். அதிமுக என்ற புதிய கட்சி உருவாகும் என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், அதிமுக ஆட்சி சாதனை ஆட்சி என்று பிரம்மையை உருவாக்குகிறார்கள். ஜெயலலிதா போலீஸ், பத்திரிக்கை, பன்னீர் செல்வம் 3 ‘பி' வைத்து ஆட்சி செய்கிறார். 110 விதி, 144 என்று நம்பர்களை வைத்து ஆட்சி செய்கிறார்.

மக்களை வறுமையில் வைத்திருந்தே அதிமுக ஆட்சி நடத்துகிறது. வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று கேப்டன் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஜெயலலிதா நம்பரை போட்டு திட்டங்களை அறிவித்ததால் மக்கள் அதிமுக அரசுக்கு 'ஜீரோ' போட்டு வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள்.
விஜயகாந்த் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதற்கு முன், ஜெயலலிதா 234 தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா? இதை சவாலாகவே விடுக்கிறேன்.தேர்தல் வந்தவுடன் ராஜிவ்காந்தி வழக்கு 7 பேரின் விடுதலை விவகாரத்தை கையில் எடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார் ஜெயலலிதா. நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்?.
காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு, மீனவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், கச்சத் தீவு உள்ளிட்ட எந்த பிரச்சினைக்கும் ஜெயலலிதா தீர்வு காணவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிக்கையாளர்களை வாரம் ஒருமுறை சந்திப்பேன் என்று கூறிய ஜெயலலிதா, தற்போது 5 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத முதல்வராக ஜெயலலிதா உள்ளார்.
தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக வெளியாகும் கருத்து கணிப்புகள் தவறானவை. சட்டமன்றத் தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாகவே உள்ளன. எந்த பேரத்திற்கும் படியாதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மக்கள் பார்த்து வாக்களித்தால் தான் முதலமைச்சர். நெஞ்சம் நிமிர்த்தி நேர் கொண்ட நடை இவைதான் ஆண்களின் கம்பீரம். ஆனால் அதிமுக அமைச்சர்களை முதுகெலும்பு இல்லாதவர்களாக மாற்றி இருக்கிறார் ஜெயலலிதா.
எவ்வளவு நாள் தான் அடிமையாக இருப்பது என்று நினைத்த அமைச்சர்கள் நிமிர்ந்திடு தலைவா குனிந்தது போதும் என்ற வாசகத்துடன் புதிய கட்சியாக அதிமுக உடைந்து எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சி உருவாகும் என பிரேமலதா பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications