சரத்குமார் போட்டியிடும் திருச்செந்தூரில் மறு கருத்துக் கணிப்பு நடத்தும் நியூஸ் 7
சென்னை: நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் போட்டியிடும் திருச்செந்தூர் தொகுதியில் மட்டும் இன்று மறு கருத்துக் கணிப்பு நடத்துகின்றன நியூஸ் 7 சேனலும், தினமலர் நாளிதழும்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை மண்டல வாரியாக நியூஸ் 7- தினமலர் வெளியிட்டு வருகின்றன. இதுவரை மேற்கு மற்றும் தெற்கு மண்டல தொகுதிகளுக்கான கணிப்புகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

நேற்று தெற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை இவர்கள் வெளியிட்டனர். திருச்செந்தூர் தொகுதிக்கான முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. திருச்செந்தூரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாக்குச் சீட்டுக்களுக்கான பையில் மொத்தமாக வாக்குச் சீட்டுகள் போடப்பட்டிருந்ததாலும், அந்தப் பை திறந்திருந்ததாலும் அவற்றில் முறைகேடு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த கருத்துக் கணிப்பை ரத்து செய்து விட்டனராம்.
அதற்குப் பதில் இன்று திருச்செந்தூர் தொகுதியில் 1000 பேரிடம் மீண்டும் கருத்துக் கணிப்பு நடத்தவுள்ளனராம். அதை நடத்தி முடித்து விட்டு அதன் முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்றைய நியூஸ் 7 கருத்துக் கணிப்பு முடிவு ஒளிபரப்பின்போது தினமலர் நாளிதழ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதியில்தான் சரத்குமார் போட்டியிடுகிறார். வலிமை வாய்ந்த திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனை அவர் எதிர்த்து நிற்கிறார். அதேசமயம், அவர் தற்போது உறுப்பினராக உள்ள தென்காசி தொகுதியில் அதிமுக வெல்லும் வாய்ப்பில் உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications