For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளியான 'ராணுவ ரகசியம்..' ஓ.பி.எஸ் பேட்டியால், பெரும் சிக்கலில் நிர்மலா சீதாராமன்! பதவி தப்புமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பன்னீர் செல்வம் மீதான நிர்மலா சீதாராமன் கோபத்திற்கு என்ன காரணம்?- வீடியோ

    சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி பாலமுருகன் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர உடல் நலப் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை பெங்களூரில் இருந்து மதுரைக்கு நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்ததாகவும், அதில், பாலமுருகன் சென்னை கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    தனது சகோதரருக்கு ராணுவ விமானத்தை வழங்கிய நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கவே டெல்லி வந்ததாக நேற்று ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதை பிரஸ் மீட்டில் போட்டு உடைத்துவிட்டார் பன்னீர்செல்வம். இதனால்தான் அவரை நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் திருப்பியனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ராணுவ விதிமுறை

    ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பழனியப்பன் இது பற்றி கூறுகையில், ராணுவ விமானம் என்பது தேசிய சொத்து. இப்படி ஒரு தேசிய சொத்தை பயன்படுத்தும்போது பாதுகாப்பு துறை அமைச்சக ஒப்புதல் பெற வேண்டும். இதில் விவிஐபி என்ற ஒரு பிரிவு உள்ளது. ஹிட் லிஸ்ட் மெம்பர்கள் என்று ஒரு பிரிவு உள்ளது. இதுபோன்ற நபர்களுக்காக, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில் அல்லது கலவர பாதிப்புள்ள பகுதிகளில் மட்டும் ராணுவ விமானத்தை பயன்படுத்துவார்கள். தனியார் வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள். அதேநேரம், இந்த பிரிவை சாராத மற்றவர்களுக்கு அந்த வசதி கிடையாது. எனது 25 வருட ராணுவ அனுபவத்தில் இதை நான் கூறுகிறேன். ராணுவ சொத்துக்களை பயன்படுத்த நிறைய சட்ட வரைமுறைகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    போக்குவரத்துக்கு வழி இல்லையா

    போக்குவரத்துக்கு வழி இல்லையா

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் இது குறித்து கூறுகையில், பன்னீர்செல்வம் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை என்ற போது மதுரையிலிருந்து சென்னைக்கு ராணுவ விமானத்தை பயன்படுத்தியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வது என்பது வேறு, போக்குவரத்திற்கு வேறு வழியே இல்லை, வேறு விமான சேவையை இல்லை என்றால் மனிதாபிமான அடிப்படை என காரணம் கூறலாம்.

    தனி விமானத்தில் அழைத்து சென்றிருக்கலாம்

    தனி விமானத்தில் அழைத்து சென்றிருக்கலாம்

    ஆனால் பன்னீர்செல்வம் நினைத்து இருந்தால் தனி விமானத்திலேயே தனது சகோதரரை மதுரையில் இருந்து சென்னை கொண்டு போயிருக்க முடியும். அதற்கான வசதி வாய்ப்புகள் அவரிடம் உள்ளன. அப்படி இருக்கும்போது பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்தி எப்படி நிர்மலா சீதாராமன் அனுமதி தந்தார்? அவர் விரும்புகிற, எதற்கு வேண்டுமானாலும் இந்திய ராணுவத்தை பயன்படுத்த முடியுமா? ராணுவ விதிமுறைகள் இதற்கு அனுமதி தராத போது நிர்மலா சீதாராமன் எப்படி சொந்தமாக ஒரு முடிவு எடுக்க முடிந்தது? என்பதெல்லாம் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

    விவகாரம் தெரியாமல் உண்மையை சொல்லிவிட்டார்

    விவகாரம் தெரியாமல் உண்மையை சொல்லிவிட்டார்

    பன்னீர்செல்வம் உண்மையிலேயே நன்றி தெரிவிக்க டெல்லி சென்றாரா அல்லது வேறு எதற்கும் சென்றாரா என்பது தெரியாது. இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த காரணத்தை கூறி விட்டார். இதன் பின்விளைவுகள் என்ன ஆகும் என்பது பற்றியெல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. எனவே இப்போது பதில் அளிக்க வேண்டிய இடத்தில் இருப்பது நிர்மலா சீதாராமன் தான்.

    மத்திய அமைச்சருக்கு தண்டனை வழங்க வேண்டும்

    மத்திய அமைச்சருக்கு தண்டனை வழங்க வேண்டும்

    நிர்மலா சீதாராமன் பன்னீர் செல்வம் கூறிய தகவலை இதுவரை மறுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்திற்காக ராணுவத்தைப் பயன்படுத்தி இருந்தால் ராணுவ விதிமுறைகளின்படி நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விதிமுறைகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு நிர்மலா சீதாராமன் உள்ளாக வேண்டும். பதவி விலகுவது மட்டும் போதாது. செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    English summary
    Nirmala Sitharaman comes under problem after Deputy Chief Minister O. Panneerselvam reveals that, he comes to Delhi to thank her for arranging a military air ambulance to bring his brother from Madurai to Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X