ஆக்கிரமிப்பு இடத்தில் தனக்கு கோவில் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை.. ஹைகோர்ட் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்கிரமிப்பு இடத்தில் தனக்கு கோவில் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை ரிசர்வ் வங்கிக்கு எதிரே உள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை அகற்ற அரசு முடிவு செய்துள்ளது.

No God is asking to have a temple in the occupied area: Chennai high court

அரசின் முடிவை எதிர்த்து அப்பு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்த கடவுளும் ஆக்கிரமிப்பு இடத்தில் தனக்கு கோவில் வேண்டும் என கேட்பதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். சாமி சிலைகளை வைத்து கோவில் கட்ட விரும்பினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் தங்களின் சுயநலத்திற்காக சாலையோரம் கோவில் கட்டுவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை ரிசர்வ் வங்கி எதிரே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்ட நீதிபதிகள் அப்புவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Madras High Court has said that no God is asking to have a temple in the occupied area. The judges said that the temple should be a recognized place if it wants to build a temple with god statues.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற