For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகரில் எந்த அரசு வாகனமும் நுழையக் கூடாது... தேர்தல் ஆணையம் அதிரடி

ஆர்.கே.நகருக்குள் எந்த அரசு வாகனங்களுக்கு நுழையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகருக்குள் எந்த அரசு வாகனமும் நுழையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

 No govt officer's vehicle to be entered in RK Nagar, orders EC

இந்நிலையில் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தினகரன் ஆதரவாளர் பணப்பட்டுவாடா செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தொகுதிக்கு 5 மேற்பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பிரச்சாரத்துக்கு மாநில அரசின் வாகனங்களை உபயோகிக்கக் கூடாது என்றும், உதவி தேர்தல் அதிகாரி தரத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் காவல் ஆணையர் மற்றும் ஆர்.கே.நகருக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்களும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறுகலான இடங்களில் இருசக்கர வாகனத்தில் நுண்பார்வையாளர்கள் ரோந்து மேற்கொள்வார்கள்.

ஆர்.கே.நகரில் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். வாக்குப் பதிவு நாளில் ஆர்.கே.நகரில் வாக்குச் சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பில் ஈடுபடும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

English summary
Any government official's cars should not be allowed to enter RK Nagar, government vehicles cannot be used for propaganda, orders State Election Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X