அடை மழை: மாணவர்களை முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்ப சென்னை, காஞ்சி, திருவள்ளூர் ஆட்சியர்கள் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு சென்னை- வீடியோ

  சென்னை: கனமழை காரணமாக மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

  சென்னையில் நேற்று மாலை முதல் அவ்வப்போது பெய்து வந்த மழை அதிகாலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் பரவலாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.

  சென்னை போரூர், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, அடையாறு, உள்ளிட்ட இடங்களில் இடியுடன் நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

  சாலைகளில் தண்ணீர் பெருக்கு

  சாலைகளில் தண்ணீர் பெருக்கு

  மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

  விடுமுறை இல்லை

  விடுமுறை இல்லை

  இந்நிலையில் மழை பெய்தாலும் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் காலையில் தெரிவித்தார். சென்னையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

  ஆட்சியர் விளக்கம்

  ஆட்சியர் விளக்கம்

  பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அவர் கூறியிருந்தார். சென்னையில் கனமழை கொட்டி வரும் நிலையில் ஆட்சியர் விடுமுறை அறிவிக்காதது மாணவர்களிடையே கவலையை எற்படுத்தியது.

  பள்ளிகளுக்கு உத்தரவு

  பள்ளிகளுக்கு உத்தரவு

  இந்நிலையில் மழை நீடிப்பதால் மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒரு மணி நேரம் முன்பாகவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  காஞ்சி கலெக்டரும் உத்தரவு

  காஞ்சி கலெக்டரும் உத்தரவு

  இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கும் முன்பாகவே வீட்டுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  திருவள்ளூர் ஆட்சியர் ஆணை

  திருவள்ளூர் ஆட்சியர் ஆணை

  திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளிலும் முன்கூட்டியே வகுப்புகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார். மழை பெய்வதால் ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப என்று ஆட்சியர் சுந்தரவல்லி ஆணையிட்டுள்ளார்.

  கடும் போக்குவரத்து நெரிசல்

  கடும் போக்குவரத்து நெரிசல்

  தொடர் மழையால் சென்னையின் அண்ணாசாலை, வடபழனி உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் அவதியடைந்தனர்.

  கனமழை நீடிக்கும்

  கனமழை நீடிக்கும்

  இருப்பினும் வடகிழக்கு பருவமழையை மக்கள் வரவேற்றுள்ளனர். இதனிடையே சென்னையில் நாளையும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Schools can send students before one hour from usual time Chennai , Thiruvallur, Kancheepuram collectors ordered. Due to Heavy rain in Coastal area of Tamilnadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற