For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 ஆயிரம் ரூபாயை திரும்ப பெறும் திட்டம் இல்லை - பொன். ராதாகிருஷ்ணன்.

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது நிறுத்தும் எண்ணமோ இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சிகள் விரைவில் புழக்கத்தில் வரும் - பொன்.ராதா- வீடியோ

    டெல்லி : ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது நிறுத்தும் எண்ணமோ இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    நாட்டில் ஊழல், கள்ளநோட்டு, கறுப்புபணம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 2016ம், ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார்.

    இதனையடுத்து புதிய ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகள் அறிமுகப்பட்டுத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன

    பணம் வாபஸ்

    பணம் வாபஸ்

    கடந்த 2016ம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்தியஅரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    லோக்சபாவில் பதில்

    லோக்சபாவில் பதில்

    மத்திய அரசு எதிர்காலத்தில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை தடை செய்யுமா அல்லது புழக்கத்தில் இருந்து நிறுத்திவிடுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு லோக்சபாவில் நிதித்துறை இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.

    வாபஸ் பெறும் எண்ணம் இல்லை

    வாபஸ் பெறும் எண்ணம் இல்லை

    கடந்த 2016ம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது நிறுத்தும் எண்ணமோ இல்லை. அதேசமயம், முக்கியமான 5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில்விட முடிவு செய்துள்ளோம்.

    ரிசர்வ் வங்கி ரிலீஸ்

    ரிசர்வ் வங்கி ரிலீஸ்

    கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இது புழக்கத்தில் விடப்பட உள்ளது. எப்போது புழக்கத்தில் விடப்படும் என்ற கால்கெடு கூற முடியாது. இந்த பிளாஸ்டிக் கரன்சிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகங்களில் அச்சடிக்கப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    English summary
    Union Minister of State for Finance Pon Radhakrishnan on Friday said there was no proposal before the government to withdraw the new Rs 2000 currency notes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X