வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னையில் கனமழை வெளுக்குமாம்...வானிலை மையம்! வார்னிங்- வீடியோ

சென்னை: வடகடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

North Coastal Tamil Nadu will get more rains, says IMD

அப்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதாக அவர் கூறினார். இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.

வடகடலோர மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். தென் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். சென்னையில் சில முறை மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North coastal districts will get heavy rain sain Chennai meteorological center. The low deprerssion continues in the same place in Bay of Bengal said Chennai meteorological center.
Please Wait while comments are loading...