புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது... நார்வே வானிலை ஆய்வு மையம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னை மழை-நார்வே வானிலை ஆய்வு மையம் என்ன சொல்லுது?- வீடியோ

  சென்னை: புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

  இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

  தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர்

  தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர்

  சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் முடிச்சூர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

  பள்ளிகளுக்கு விடுமுறை

  பள்ளிகளுக்கு விடுமுறை

  சென்னையில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  புதன் கிழமை முதல் இருக்காது

  புதன் கிழமை முதல் இருக்காது

  இந்நிலையில் சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. புதன்கிழமையில் இருந்து தமிழகத்தில் மழை இருக்காது என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  பிற்பகலுக்குப் பிறகு

  பிற்பகலுக்குப் பிறகு

  சென்னையில் இன்று பகல் 12 மணிவரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் பிற்பகலுக்குப் பிறகு சென்னையில் சாரல் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

  நாளை எப்படி இருக்கும்?

  நாளை எப்படி இருக்கும்?

  நாளையும் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

  வானம் தெளிவாக காணப்படும்

  வானம் தெளிவாக காணப்படும்

  புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. புதன் கிழமைக்குப் பிறகு ஒருவாரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Norway Meteorological center said Rain will not be there in Chennai from Wednesday. Today and tomorrow some places of Chennai will get heavy rain sometime.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற