For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசுமை வீடு கேட்டு பன்னீரை விரட்டிய சீலையம்பட்டி மக்கள்....!

|

தேனி: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்யப் போன நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்கள் எதிர்ப்பால் பிரசாரத்தை விட்டு விட்டு திரும்ப நேரிட்டது.

பிரசாரத்திற்குப் போன இடத்தில் சீலையம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து கொண்டு கடந்த தேர்தலின்போது உறுதியளித்த பசுமை வீடு திட்டம் என்னவாயிற்று, எங்களுக்கு ஏன் வீடு தரவில்லை என்று கேட்டு குரல் கொடுக்கவே பிரசாரத்தை நிறுத்தி விட்டுப் போய் விட்டு பன்னீர்செல்வம்.

ஓ.பன்னீர் செல்வத்தை முற்றுகையிட்டது பெண்கள் என்பதால் இப்பகுதியில் பெண்கள் வாக்கு அதிமுகவுக்கு சுத்தம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சீலையம்பட்டியில்

சீலையம்பட்டியில்

சீலையம்பட்டியில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

பன்னீருக்கு எதிராக திடீர் கோஷம்

பன்னீருக்கு எதிராக திடீர் கோஷம்

அப்போது, கூட்டத்தில் இருந்த பெண்கள் மத்தியில் அமைச்சருக்கு எதிராக திடீரென்று கோஷம் எழுந்தது.

பசுமை வீடு என்னாச்சு

பசுமை வீடு என்னாச்சு

உடனே, பன்னீர்செல்வம் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். சிறிது நேரத்தில் அனைவரும் ஒன்று திரண்டு பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஏமாற்றி விட்டனரே

ஏமாற்றி விட்டனரே

பசுமை வீட்டு கட்டித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் வரை வசூலித்தனர். இதுவரை வீடுகள் கட்டித்தரவில்லை. எங்களை அதிமுகவினர் ஏமாற்றி விட்டனர். எனவே, வரும் தேர்தலில் எங்கள் கிராமத்தை சேர்ந்த யாரும் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று அவர்க் கூறினர்.

கைது செய்வதாக மிரட்டினர்

கைது செய்வதாக மிரட்டினர்

பெண்கள் சிலர் கூறுகையில், அமைச்சருடன் வாக்குவாதம் செய்ய இருந்தோம். இந்த விபரத்தை முன்கூட்டியே அறிந்த போலீசார் அமைச்சர் பிரசாரம் செய்யும் வரை அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் உங்களை கைது செய்வோம் என மிரட்டினர். இதனால் எங்களால் அமைச்சர் முன்னிலையில் எதிர்ப்பை காட்ட முடியவில்லை என்றனர்.

கரட்டுப்பட்டியிலும் இதே பிரச்சினைதான்

கரட்டுப்பட்டியிலும் இதே பிரச்சினைதான்

ஏற்கனவே போடிநாயக்கனூர் அருகே கரட்டுப்பட்டி என்ற கிராமத்திலும் பன்னீர் செல்வத்தை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் போராட்டம் நடத்தியுளளனர். தற்போது சீலையம்பட்டியிலும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Finance minister O Pannerselvam faced the ire of villagers near Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X