சினிமா பைனான்சியர் போத்ராவிற்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி.. எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்துவட்டி புகாரில் குண்டர் சட்டத்தில் கைதான பைனான்சியர் போத்ராவை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தியாகராயர் நகரைச் சேர்ந்த செந்தில் கணபதி, சினிமா பைனான்சியர் போத்ரா மீது கொடுத்த புகாரை அடுத்து போத்ரா மற்றும் அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

One day police custody for Bothra and his 2 sons

இந்நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த பகன்சந்த் பண்டாரி என்பவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில், போத்ரா மீது மோசடிப் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, போத்ரா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தான் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று போத்ரா சார்பில் மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு வரும் 11ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

One day police custody for Bothra and his 2 sons

இந்நிலையில், போத்ரா மற்றும் அவரது 2 மகன்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, போத்ரா, அவரது இரு மகன்களை ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Egmore court, granted one day police custody of Bothra and his 2 sons.
Please Wait while comments are loading...