For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை- தற்கொலை எண்ணிக்கை 12- ஆனது!

காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

By Mathi
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே விவசாயி மாசிலமாணி எலிக்கு வைத்த விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போதுமான மழை பெய்யாததாலும் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பதாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போனது. ஈரோடு மற்றும் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்து போனதால் 11 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

One more farmer commits suicide after crop damage

இந்த விவசாய குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகளின் கோரிக்கை. இதனிடையே பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை உக்கடை விவசாயி மாசிலமாணி நேற்று எலிக்கு வைத்திருந்த விஷமாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்திருக்கிறார்.

One more farmer commits suicide after crop damage

விவசாயம் பொய்த்து போனதால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அனைத்து விவசாயிகள் ச்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், இது பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளடு. இனியும் தமிழக அரசு மவுனம் காக்க கூடாது என்றார்.

English summary
The Pattukottai police said Masialamani of Ponnavarayan kottai village consumed pesticides on Sunday. Neighbours found him lying unconscious and rushed him to hospital. Masilamani died while undergoing treatment at Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X