For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் தேர்தல் அறிக்கை- சொல்லுவாங்க செய்வாங்களா?- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பு முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து ஒன்இந்தியா- தமிழ் இணையதளம் கேட்ட கருத்துக் கணிப்புக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லுவாங்க செய்வாங்களா என்ற பதிலைக் கொடுத்துள்ளனர்.

அதிமுக தனது லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள் குறித்து வாசகர்களின் கருத்துக்களை அறிய ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை வைத்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு வாசகர்கள் கொடுத்த வரவேற்பு குறித்த பார்வை ...

ரூ5 லட்சம் வரை வருமான வரி விலக்கு

ரூ5 லட்சம் வரை வருமான வரி விலக்கு

இந்த கேள்விக்கு 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 3516 வாக்குகள் கிடைத்துள்ளன.

தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு

தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு

இந்த வாக்குறுதிக்கு 10 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 1981 வாக்குகள் கிடைத்துள்ளன.

10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

இந்த வாக்குறுதிக்கு 8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 1617 வாக்குகள் கிடைத்துள்ளன.

மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு

மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு

இதற்கு சுத்தமாக ஆதரவு இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதாவது 1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. மொத்தம் 89 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

நதிகளை தேசியமாக்கி இணைப்பது

நதிகளை தேசியமாக்கி இணைப்பது

இதற்கு 12 சதவீத ஆதரவு அதாவது 2390 வாக்குகள் கிடைத்துள்ளன.

மானியவிலை சிலிண்டர் எண்ணிக்கை உயர்வு

மானியவிலை சிலிண்டர் எண்ணிக்கை உயர்வு

இதற்கும் ஆதரவு சரியில்லை. அதாவது ஒரு சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. மொத்த வாக்குகள் 208 ஆகும்.

மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவோம்

மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவோம்

இதையும் யாரும் பெரிதாக வரவேற்கவில்லை. 333 வாக்குகள், அதாவது 2 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு

இதையும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு சதவீத ஆதரவு, அதாவது 174 வாக்குகளே கிடைத்துள்ளன.

எல்லாமே வழக்கமான வாக்குறுதிகள்தானே

எல்லாமே வழக்கமான வாக்குறுதிகள்தானே

இப்படிச் சொல்லியுள்ளனர் 15 சதவீதம் பேர். அதாவது 2956 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

சொல்லுவாங்க.. செய்வாங்களா?

சொல்லுவாங்க.. செய்வாங்களா?

இதுதான் பெரும்பாலானோர் கேட்டுள்ளது. மொத்தம் 33 சதவீதம் பேர், அதாவது 6634 வாக்குகள் இந்த ஆப்ஷனுக்குத்தான் கிடைத்துள்ளன.

மொத்த ஓட்டுக்கள்: 19,898

மொத்த ஓட்டுக்கள்: 19,898

இந்தக் கருத்துக் கணிப்பில் பதிவான மொத்த வாக்குகள் 19,898 ஆகும்.

English summary
Oneindia- Tamil readers have expressed theiri opinion on ADMK's maniefsto, released by CM Jayalalitha yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X