For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெங்காயம் இல்லையாம்.. வெறும் சட்னி மட்டும்தானாம்... சின்ன வெங்காயம் விலையும் ஏறிப்போச்சுங்கோவ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு படத்தில் வடிவேலு சொல்வார். "கிட்னி இல்லை. சட்னி மட்டும்தான் இருக்கு" என்று. இனி அது கூட கிடைக்காது போல போகிற நிலையைப் பார்த்தால்.

பெரிய வெங்காயத்தின் விலை தாறுமாறாக உள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகின்றது. இந்தியா முழுவதும் பெரிய வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தான் அதிக அளவு பெரிய வெங்காயம் விளைச்சல் உண்டு.

ஆனால், இந்த ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெங்காயத் தட்டுப்பாடு உருவாகி விட்டது. டெல்லியில் 1 கிலோ வெங்காயம் ரூபாய் 100க்கு விற்கப்படுகிறது. சென்னை உள்பட மற்ற நகரங்களில் 1 கிலோ வெங்காயம் ரூபாய் 80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாசிக் வெங்காயம் குறைவு:

நாசிக் வெங்காயம் குறைவு:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா மாநிலங்களில் இருந்து 70 லாரிகளில் வெங்காயம் வரும். இதில் மகராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து வரும் வெங்காயம்தான் முதல் ரக வெங்காயமாக உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக நாசிக் வெங்காயம் வரத்து குறைந்து விட்டது. அதற்கு பதில் ஆந்திரா வெங்காயம் வருகிறது. இதை மக்கள் விரும்பி வாங்குவது இல்லை.

கிலோ 80 ரூபாயாம்:

கிலோ 80 ரூபாயாம்:

சென்னையில் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 80க்கு விற்கப்படுவதால் கடைகளில் மக்கள் அதிகம் வாங்காமல் குறைவாக வாங்குகிறார்கள். இதனால் விற்பனை குறைந்து விட்டது.

ஏறிப்போச்சு சின்ன வெங்காயம்:

ஏறிப்போச்சு சின்ன வெங்காயம்:

ஆனால், சின்ன வெங்காயம் விலை கிலோ ரூபாய் 45க்கு கிடைப்பதால் கடைகளில் இதன் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக இதுதான் அதிக விலைக்கு விற்கும். இப்போது தலைகீழாகியுள்ளது.

காயம் தரும் வெங்காயம்:

காயம் தரும் வெங்காயம்:

அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் கடை நடத்தும் சாமுவேல் கூறுகையில், ‘‘வழக்கமாக எங்கள் கடையில் சின்ன வெங்காயம் 25 கிலோ அளவுக்கு விற்பனையாகும். ஆனால் இதன் விலை குறைவாக உள்ளதால் இப்போது 75 கிலோவுக்கு மேல் விற்பனையாகிறது'' என்றார். பெரிய வெங்காயம் விலை அதிகமாக உள்ளதால் அதன் விற்பனை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவித்தார்.

English summary
Bellary onion rate hicked in All over india, due to that small onion rates also in high range in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X