ஜெ. பிறந்தநாள் விழா: ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil
  ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை | Oneindia Tamil

  சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் சென்னையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழா நிகழ்வுகள் குறித்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  OPS and EPS discussion about Jayalalithaa birthday

  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இந்தக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ரத்ததான முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கட்சியில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்னதாகவே நிரப்பப்படுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  OPS and EPS discussion about Jayalalithaa birthday. Late Chief Minister Jayalalithaa birthday which falls on Feb 24th and ADMK chief party members attending the Meeting.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற