"செங்கோட்டையனை பிளான் செய்து அசிங்கப்படுத்தினார்கள்....." - கொளுத்திப்போடும் தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  செங்கோட்டையனிடம் இருந்த பதவி அவை முன்னவர் பதவி ஓ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டது- வீடியோ

  மதுரை: பிளான் செய்து செங்கோட்டையனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அசிங்கப்படுத்தி விட்டதாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் அரசு தவறான அணுகுமுறையை கையாண்டு வருவதாக தெரிவித்தார். ஊழியர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் லட்சக்கணக்கான அவர்களின் குடும்பத்தினரையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

  OPS team wants to humiliate Sengottaiyan by dropping him down says dinakaran

  மேலும் , ஓபிஎஸ்சுக்கு அவை முன்னவர் பதவி கொடுக்கப்பட்டதே செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காக தான். கட்சியில் மூத்த நிர்வாகியான அவரை அசிங்கப்படுத்துவதற்காக ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் இணைந்து தான் இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர்.

  விரைவில் அதிமுகவினரும், அதிமுக நிர்வாகிகளும் துரோகிகளை இனம்கண்டுக்கொள்வார்கள், அவர்கள் அனைவரும் அதனை உணரும் தருணம் உண்மையான அதிமுக பலம்பெறும்.அவர் தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாக சிலர் வதந்தி பரப்பி விடுவகின்றனர். அதுபோன்ற எந்த எண்ணமும் தனக்கில்லை என்றும் தினகரன் விளக்கமளித்தார்.

  தேர்தல் ஆணையம் கட்சியை தவறான இடத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டதாக கூறிய அவர், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆட்சி நடந்துக்கொண்டிருப்பதாக கூறினார். விரைவில் மாவட்டந்தோறும் மக்களை சந்திக்கவுள்ளதாக கூறிய அவர், தொழிலாளர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  OPS team wants to humiliate Sengottaiyan by dropping him down says dinakaran. In the Madurai pressmeet dinakaran said that, govt is taking wrong decision in the Transport workers problem.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X