ஆனானப்பட்ட ஆக்ஸ்போர்டுக்கே அஜித்துதான் 'உதாரண புருஷன்'!
ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள அண்ணா என்ற தமிழ் வார்த்தைக்கு அஜித்துடன் நடிக்கனும் என்ற உதாரணம் போடப்பட்டுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள அண்
Recommended Video

சென்னை : ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள அண்ணா என்ற தமிழ் வார்த்தைக்கு அஜித் அண்ணனுடன் நடிக்க வேண்டும் என்று உதாரணமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல ஆங்கில அகராதியான ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, குஜராத்தி மொழியைச் சேர்ந்த 70 வார்த்தைகள் புதிதாக அகராதியில் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ் மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் அண்ணா என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது.

உறவு முறையில் அண்ணா என்றால் மூத்த சகோதரர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும், ஆனால் இந்த வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் இடம்பெற்றதன் மூலம் அண்ணா என்ற வார்த்தை உலக அரங்கிற்கு சென்றுள்ளது.
அண்ணா 2 அண்ணண் என்றும் சொல்லப்படும் இந்த வார்த்தைக்கான அர்த்தமாக ஆக்ஸ்போர்டு சில விளக்கங்களையும் கொடுத்துள்ளது. தெற்காசியாவில் அண்ணன் என்ற வார்த்தை மூத்த சகோதரர் எனக் குறிப்பிடப்படுகிறது. ஒருவரை மரியதையாக அழைக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு சொற்றொடர் வடிவில் இரண்டு விளக்கங்களையும் அளித்துள்ளது. அதில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய 'அண்ணனை' குடும்பஸ்தனாக பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு சொற்றொடர் விளக்கத்தில் நான் அஜித் 'அண்ணா'வுடன் நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அஜீத்தின் புகழ் ஆக்ஸ்போர்டு வரை சென்றுவிட்டது என்பது தான் இதில் சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆனானப்பட்ட ஆக்ஸ்போர்டுக்கே தமிழ் வார்த்தைக்கான அர்த்தத்தை உலக மக்களுக்குப் புரியை வைக்க உதாரணம் சொல்ல அஜித் தேவைப்படுகிறாரே என்பது தல ரசிகர்களுக்கு குஷியான செய்தி தான் போங்க.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications