ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சீனியர் சிதம்பரமும் கைதாகலாம்: எச் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சீனியர் சிதம்பரமும் கைதாகலாம் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்தார்.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 1-ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரியது.

கார்த்தியை மும்பை கொண்டு சென்ற சிபிஐ

கார்த்தியை மும்பை கொண்டு சென்ற சிபிஐ

எனினும் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்த மும்பைக்கு கடந்த 4-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை அழைத்து சென்றனர்.

இந்திராணி முன்பு கார்த்தியிடம் விசாரணை

இந்திராணி முன்பு கார்த்தியிடம் விசாரணை

இந்திராணி முகர்ஜிக்கும் கார்த்திக்கும் இடையேயான பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கூடுதல் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு கார்த்தியை அழைத்து சென்று சிபிஐ விசாரித்தது.

3 நாட்களுக்கு

3 நாட்களுக்கு

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அவரது காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. கார்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளனர்.

பாட்டியாலா நீதிமன்றம்

பாட்டியாலா நீதிமன்றம்

கார்த்தி சிதம்பரத்துக்கு 3 நாட்கள் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 6 நாட்கள் காவல் நீட்டிக்க சிபிஐ அதிகாரிகள் கோரிய நிலையில் வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டது.

சிதம்பரம் கைதாகலாம்

இதுகுறித்து எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மகன் கார்த்திக்கிற்கு மீண்டும் 3 நாட்கள் சி.பி.ஐ காவல் நீட்டிப்பு. முழு விசாரணைக்குப் பின் சீனியர் சிதம்பரம் கைதாகலாம். கார்த்தி சிதம்பரம் செய்த தவறுகள் சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP National Secretary H. Raja says that P.Chidambaram may be arrested after complete interrogation in INX Media case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற