For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ரூபாய் நோட்டு செல்லாது' அறிவிப்பால் கறுப்பு பணம் ஒழிந்துவிடாது: ப. சிதம்பரம்

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கறுப்பு பணம் ஒழிந்துவிடாது; ஊழலுக்கும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கும் தொடர்பு இல்லை என முன்னாள் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது மற்றும் புதிய ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்துவதால் கறுப்பு பணம் ஒழிந்துவிடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ப. சிதம்பரம் அளித்த பேட்டி:

மோடியின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னர் நாடு முழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கி வரிசையிலும், ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

P Chidambaram comes down heavily on Demonetization

கறுப்பு பணம் ஒழியாது

இது மிகப்பெரிய இயற்கை பேரிடர். கறுப்பு பண ஒழிப்புக்கும் பண மதிப்பு நீக்கத்திற்கும் தொடர்பு இல்லை. பழைய நோட்டை செல்லாது என்று அறிவிப்பதால் கறுப்பு பணம் ஒழிந்து விடாது. இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போல உள்ளது.

பிடிபடும் புது நோட்டுகள்

புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்வதாலும் கறுப்பு பணம் ஒழிந்து விடாது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கோவை, சென்னை, விமான நிலையங்கள், தலைமை செயலாளர் வீட்டில் புதிய நோட்டுக்கள் பிடிபடுகின்றன.

ரொக்கமில்லா பணபரிவர்த்தனை

ஊழலுக்கும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கும் சம்பந்தமே கிடையாது. இது விளையாட்டாக சொல்லப்படும் கதை, இது ஆழமே இல்லாத கருத்துக்கள்

பொறுமையா?

பணம் வேண்டுமே என்பதற்காக பொறுமையாக இருப்பதாலேயே மக்கள் மனதில் பொருமல் இல்லாமல் இல்லை. டிசம்பர் 30 வரைக்கும் மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.

ஆதரவு?

மத்திய அரசின் சமூக வலைதளங்களில் உள்ளனர். அவர்கள்தான் ஆன்லைன் சர்வேயில் பங்கு கொள்கின்றனர். எனவே மோடியின் அறிவிப்புக்கு ஆதரவு இருப்பது போல தெரிகிறது.

கடும் பாதிப்பு

பணமதிப்பு நீக்கம் விலை வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 கோடி மக்கள் தினசரி சம்பளத்தை நம்பியே இருக்கின்றனர். 15 கோடி மக்கள் தினசரி கூலியை நம்பியே உள்ளனர். 50 நாட்களாக வேலையின்றி வருமானம் இன்றி தவிக்கின்றனர்.

இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.

English summary
Former union finance minister P Chidambaram has come down heavily on the Demonetization.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X